வங்கிகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் தான் அதிக அளவில் முதலீடு கொடுக்கிறது. இதில் முக்கியமான திட்டம் தான் நேர வைப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக நல்ல வருமானத்தை பெறலாம். முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பை இதன் மூலம் பெறலாம். நல்ல  வட்டி வீதவீதத்தை பெறலாம் முதலீட்டாளர்கள் வெவ்வேறு கால அவகாசத்தோடு இதில் முதலீடு செய்யலாம்.

ஒரு வருடம், இரண்டு வருடம், 3 வருடம், நான்கு வருடம் மற்றும் ஐந்து வருடம் வரை பணத்தை முதலீடு செய்ய விருப்பம் இருக்கிறது. இந்த திட்டத்தில் ஒரு வருடம் முதலீடு செய்தால் 6.9% வரை வட்டி கிடைக்கும். அதே சமயம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகால முதலீட்டுக்கு ஏழு சதவீத வட்டியும், 5 ஆண்டுகால முதலீட்டுக்கு 7.5% வட்டியும் கிடைக்கும். 7.5 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு 2,24,974 ரூபாய் வட்டி கிடைக்கும். முதிர்ச்சி காலத்தில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 7,24,974 ரூபாய் கிடைக்கும்