
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதைப் பார்த்து தனசேகரன் ஏன் அதிக அளவில் நுங்கு வாங்கி வந்துள்ளாய் என கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் தன் மனைவியை அவர் கத்தியால் குத்தினார். இதை தடுக்க வந்த மகள் சாந்தினியையும் அவர் கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் ஏ. பள்ளிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனசேகரனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.