சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 94 ஆயிரத்து 720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 11,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் துய தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 12916 ரூபாய்க்கும், ஒரு சவரன் 103328 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 183 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 1,83,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
