டெல்லி மக்களுக்கு தண்ணீர் ATM கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இவற்றின் மூலம் குடும்பத்தில் உள்ள  ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு 20லி RO தண்ணீர் வழங்கப்படும். ஏற்கனவே 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தண்ணீர் ATM கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 500 தண்ணீர் ATMகளை அமைக்க திட்டமிட்டுள்ள நிலையில், மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் 4 தண்ணீர் ATMகளை நிறுவ உள்ளது. ஏழைகள் கூட தினமும் ஆர்ஓ தண்ணீர் குடிக்கலாம்.

இதுவரை 2ஆயிரம் குடும்பங்கள் இந்த அட்டையைப் பெற்றுள்ளனர். போதிய குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் ஒவ்வொருவருக்கும் தலா 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கும். பணக்காரர்கள் வீட்டில் இருந்த RO வாட்டர் தண்ணீரை இப்போது ஏழை மக்களும் குடிப்பார்கள் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.