சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்றில், சுமார் 1000 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் துணிச்சலாக இறங்கும் காட்சிகள் வெளியாகி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள பகுதிகளில், ராட்சத பம்புகள் பழுதடையும் போது அல்லது மணலில் சிக்கிக்கொள்ளும் போது, அவற்றைச் சீரமைக்க வேறு வழியின்றி இத்தகைய ஆபத்தான முறையில் மனிதர்கள் உள்ளே இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Wealth (@wealth)

“>

இந்நிலையில் இருள் சூழ்ந்த, குறுகலான அந்தப் பாதை வழியாகச் சிறு கயிறு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் அவர் ‘பாதாள லோகம்’ செல்வது போன்ற காட்சிகள் காண்போரின் நெஞ்சை பதற வைக்கின்றன. இன்ஸ்டகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இயந்திரக் கோளாறு போன்ற உயிருக்கு ஆபத்தான சூழல்கள் நிறைந்த இவ்வளவு ஆழமான பகுதியில், மக்களின் தாகத்தைத் தணிக்க ஒரு நபர் தனது உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றுவது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இதையடுத்து “பார்க்கும் போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற பயம் உண்டாகிறது” எனப் பல பயனர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.