தமிழக வெற்றி கழகத்தில் பணம் மற்றும் ஜாதி அடிப்படையில் பதவிகள் வழங்கப்படுவதாக தற்போது கட்சிக்குள் உட்கட்சிப் பூசல்கள் தலைதூக்கியுள்ளது. தேர்தலில் நிற்க வேட்பாளர்களுக்கு 10 கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பேரம் பேசுவதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சென்னை பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகள் இது தொடர்பாக அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று  சென்னை பனையூர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விஜயின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் ஆதரவாளர்கள் பணம் வாங்கிக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய நிலையில் இதே போன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பணம் வாங்கிக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆதரவாளர்கள் பதவிக்காக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளும் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.