ஜியோ தனது பயனர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த திட்டத்தில் கூடுதல் சிம், 5ஜி டேட்டா மற்றும் 3 நபர்களுக்கு அழைப்பு போன்ற பலன்களைப் பெறலாம். ஜியோவின் ரூ.699 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கிறது. மேலும் 100ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது.

இதனுடன், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஜியோ ரூ 699 திட்டம் ஒரு மாத இலவச ட்ரைலுடன் வருகிறது. இந்த திட்டத்தில் குடும்பத்தின் மூன்று சிம்களை சேர்க்கலாம். ஒவ்வொரு சிம்மைச் சேர்ப்பதற்கும் ரூ.99 கட்டணம் செலுத்த வேண்டும்.