சென்னையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசையும், விஜயின் அரசியல் முயற்சிகளையும் குறிவைத்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.  “மக்களுக்கு நல்லது செய்யாமல் கூட்டணியை மட்டும் வலுப்படுத்தினால் என்ன பயன்? திமுக கூட்டணியை அசைப்போம், உறுதியாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்,” என நயினார் நாகேந்திரன் உறுதியாகக் கூறினார்.

தற்போது பாஜக தலைமையிலான  கூட்டணியில்சிக்கல் எதுவும் இல்லை என்றும், தேர்தலுக்கு முன்பாக கூட்டணி மேலும் வலுப்பெறும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது: திமுக இருமுறை தொடர்ந்து ஆட்சி செய்த வரலாறு தமிழகத்தில் இல்லை. இந்த முறை தமிழகத்தில் மாற்றம் நிச்சயம். எங்கள் கூட்டணி வெற்றிபெறும்,” என்றார்.

அதன்பிறகு  “விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருடைய நோக்கமும், திமுகவை அகற்றுவதுதான். ஆனால், இதுவரை ஒரு கவுன்சிலராகக் கூட வெற்றி பெறவில்லை. எம்எல்ஏ வேட்பாளராகக் கூட அவர் இல்லை. இப்போது தான் கட்சி தொடங்கியிருக்கிறார். “எங்களை விமர்சனம் செய்ய அவருக்கு தேவையே இல்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் புதிய கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க பலரும் வருவார்கள். ஆனால், தேர்தலுக்கான நேரத்தில் மக்கள் வாக்கு என்ன அளவில் கிடைக்கும் என்பதே முக்கியம்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.