
மத்திய பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கு எந்த வித அறிவிப்பும் இல்லாததால், தமிழ்நாடு என்ற வார்த்தை உரையில் ஒரு முறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக, நிர்மலா சீதாராமன் தனது உரையில் ஏதேனும் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டுவார். ஆனால் இந்த பட்ஜெட் உரையில் அவர் திருக்குறளை சுட்டிக்காட்டவில்லை. இதனால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுவதாக திமுக எம்பி திருச்சி சிவா விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படவில்லை. எய்ம்ஸ் குறித்து தகவல் இல்லை என்றும் கூறியுள்ள அவர் தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதாகவும் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்தும் மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.