ஜப்பான் நாட்டின் ஒசாக பகுதியில் அமைந்துள்ள சுஷி கில்மோன் உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட உணவு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. Kiwami Omakase என்ற சுஷி உணவு அந்த உணவகத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கு பிலிப்பைன்ஸில் 2010ல் சுஷி விற்பனை செய்யப்பட்ட சாதனையை தற்போது ஜப்பானின் இந்த சுஷி முறியடித்துள்ளது. இரண்டு லட்சம் மதிப்புள்ள இந்த சுஷியில் சிறந்த 20 பொருட்கள் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.