இந்தியாவின் வரலாற்று வெற்றியை ‘சந்திரயான் 3’ பதிவு செய்திருக்கிறது. நேற்று மாலை 6.04 மணிக்கு, விக்ரம் லேண்டர், ரோவர் பிரக்யானை சுமந்து, சந்திரனின் தென் துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது. இந்நிலையில் சந்திராயன் -3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டபோது அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். மேலும், விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து மழை குவிந்து வருகிறது. அந்த வீடியோவில், இப்ப நான் பெங்களூரில்  விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறேன். நான் பிறந்து வளர்ந்தது விழுப்புரத்தில் எனது பள்ளிப் பருவம் ஒரு அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில்  நான் ஒரு ஆவ்ரேஜ் மாணவன். அடுத்து என்ன  படிக்கனும், எங்க படிக்கனும் என்ற ஐடியாவும் எனக்கில்லை. வீட்டில் யாருக்கும் கல்விசார்ந்த பேக்கிரவுண்ட் இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  சேர்ந்தேன் என  இப்படியே தொடர்கிறது இந்த வீடியோ.