செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம்.

ஒருவேளை ராகுல் காந்தியின் நடைபயணம் கர்நாடகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கலாம். அது கர்நாடகம்,  இது தமிழகம்.  தமிழகத்தில் நடைபெறும் செய்தவர்கள் எல்லாம்,  நடைபயணம் செய்து கொஞ்சம் உயரம்  தேய்ந்திருக்கின்றார்களே, தவிர அவர்கள் இருக்கக்கூடிய கட்சி உயர்ந்ததாக நான் பார்த்ததில்லை,  என் அனுபவத்தில் நான் பார்த்ததில்லை..

தான் காலூன்றுவதற்கும்,  வேரூன்றுவதற்கும்,  வெற்றி பெறுவதற்கும்…  ஒரு மனிதனாகிய அண்ணாமலையின்  உழைப்பை நான் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். ஓடி ஓடி உழைக்கிறார்,  நடக்கின்றார்.  எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கிறார். அண்ணாமலை இடையிடையே நடக்கிறார். எப்படியோ தமிழகத்தில் அவர் கிரிவலம் வருகிறார். பாதி வாகனத்திலும், பாதி கால்நடையாகவும் நடந்து வருகிறார்.

நான் என்ன சொல்கிறேன் என்றால் ? கட்சியை வளர்க்க வேண்டும் என்று அண்ணாமலை உழைக்கின்றார். இபிஎஸ் – ஓபிஎஸ் போட்டியில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது.  நியாயம்தான்… அவர்கள் கட்சியை அவர்கள் வளர்ப்பதற்கும் முயற்சி செய்கிறார்கள். நான் சொல்வது ஒன்றுதான். மூன்று சதவீத வாக்கு உள்ள கட்சி, 30 சதவீத நன்கு உள்ள கட்சியை மூன்றாக உடைத்து வைத்து,  மூன்று பேரும்  தனித்தனியாக..

ஒன்று வந்திராத… தனித்தனியாக வா,  வந்து எங்கள் பல்லக்கில் நான் அமர்ந்து கொள்வேன்,  என்னை தூக்கு என்று ஒரு கட்சி நினைக்கிறது என்று சொன்னால் ? அதை புரிந்து கொண்டு…  சாதுரியமாக காய் நகர்த்தி, ஒற்றுமையின் ஆயுதத்தை கையில் எடுத்து,  கட்சியை வெற்றிக்கு கொண்டு போக வேண்டிய வியூகத்தை வகுக்கக் கூடிய புத்திசாலி தலைவனாக இருக்க வேண்டும். என தெரிவித்தார்.