
பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பும் விதிக்கப்படவில்லை என்பதே இதற்கு காரணமாகும். உங்கள் கணக்குகளில் இருந்து செல்லுபடி ஆகும் பரிவர்த்தனைகளை நீங்கள் தொடர்ந்து செய்யும் வரை எந்த பிரச்சனையும் இருக்காது.
ஆனால் அதிகமான வங்கி கணக்குகளை வைத்திருப்பதால் நீங்கள் அனைத்தையும் பயன்படுத்த முடியாது. வங்கி கணக்கு நீண்ட காலம் பயன்படுத்தப்படாவிட்டால் அது செயலிழந்து விடும். அதன் பிறகு அந்தந்த வங்கிகள் ரிசர்வ் வங்கி விதிகளின்படி தங்கள் சேவைகளுக்கான கட்டிடங்களை வசூலிக்கின்றன. எனவே ஒன்று அல்லது இரண்டு வங்கி கணக்குகளை மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.