ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஏராளமானோரை கொன்று குவித்ததோடு 200க்கும் மேற்பட்டோரை பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரேல் பதில் தாக்குதல் மேற்கொள்ள இரண்டு தரப்பினருக்கும் இடையே போர் நீடித்து வந்தது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் நான்கு நாட்கள் போர் நிறுத்தத்திற்கு முன் வந்துள்ளது.

இதன் மூலம் ஹமாஸ் பிடியில் இருக்கும் 50 பணய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதேபோன்று இஸ்ரேலிடம் இருந்து 150 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்ரேல் 300 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அதில் 287 பேர் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் எனவும் மீதம் 13 பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.