இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பீகார் மாநிலத்தில் தற்போது பள்ளி கல்வித்துறை ஆசிரியர் நியமனத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் தகுதி தேர்வில் அதிகபட்சம் மூன்று பயிற்சிகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அவர்கள் பணியிழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 3.5 லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒப்பந்த ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு பிப்ரவரி 26 முதல் மார்ச் 13 வரை நடைபெறும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.