2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் வெளியிட்டார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான 21 வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதேபோல திமுக தேர்தல் அறிக்கையையும் ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கையின் 20 சிறப்பம்சங்கள் இதோ !

1 . பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

2 . மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறப்படும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

3. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

4. ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்.

5. ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

6. புதிய கல்விக் கொள்கை இரத்து செய்யப்படும்.

7. நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

8. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும்.

9. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

10. ஆளுநர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும்.

11. ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

12. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.

13. உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

14. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

15. ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

16. அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

17. இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

18. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

19. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் வட்டியில்லா கடன்.

20.தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும்.