2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், முதலமைச்சருமான முக ஸ்டாலின் வெளியிட்டார்.

2024 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை  ஒதுக்கி நிறைவு செய்துள்ள நிலையில், திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான 21 வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் வெளியிட்டார். அதேபோல திமுக தேர்தல் அறிக்கையையும் ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் இதோ !

1 . பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது

2 . மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறப்படும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்.

3. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

4. ஒன்றிய அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும்.

5. ரயில்வே துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

6. புதிய கல்விக் கொள்கை இரத்து செய்யப்படும்.

7. நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும்.

8. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட மாநில வளர்ச்சி குழு அமைக்கப்படும்.

9. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

10. ஆளுநர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 361 நீக்கப்படும்.

11. ஒன்றிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

12. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும்.

13. உழவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும்.

14. இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

15. ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.

16. அனைத்து மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் சம அளவு நிதி வழங்கப்படும்.

17. இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

18. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

19. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் வட்டியில்லா கடன்.

20. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுமையாக அகற்றப்படும்.

21. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நாட்கள் 100லிருந்து 150 நாட்களாகவும், ஊதியம் ரூபாய் 400 ஆகவும் உயர்த்தப்படும்.

22. ஒன்றிய அரசு உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவை தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்படும்.

23. பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும்.

24. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

25. மாணவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

26. இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் மேம்பாடு குறித்த ‘சச்சார்’ கமிட்டி பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்.

27. சென்னையில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும்.

28.ரயில் கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

29.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும்.

30. எல்பிஜி சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை ரூ. 75 ஆகவும் மற்றும் டீசல் விலை ரூ. 65 ஆகவும் குறைக்கப்படும்.

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தி.மு.கழக வேட்பாளர்கள் பட்டியல்!

ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு

தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

மத்திய சென்னை – தயாநிதி மாறன்

நீலகிரி (தனி) – ஆ. ராசா

வடசென்னை – கலாநிதி வீராசாமி

தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

அரக்கோணம் – எஸ். ஜெகத்ரட்சகன்

வேலூர் – கதிர் ஆனந்த்

திருவண்ணாமலை – சி.என். அண்ணாதுரை

ஆரணி – தரணி வேந்தன்

தர்மபுரி – ஆ.மணி

கோயம்புத்தூர் – கணபதி பி.ராஜ்குமார்

சேலம் – டி.எம் செல்வகணபதி

ஈரோடு – கே.இ.பிரகாஷ்

காஞ்சிபுரம் – (தனி) – க.செல்வம்

கள்ளக்குறிச்சி – கே.மலையரசன்

பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

தஞ்சாவூர் – ச.முரசொலி

பெரம்பலூர் – அருண் நேரு

தேனி – தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி (தனி) – ராணி ஸ்ரீ குமார்