உத்தரப் பிரதேசத்தில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு அக்கா தனது இரண்டு தங்கைகளை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அக்கா அஞ்சலிக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அஞ்சலி காதலித்து வந்த காதலனை அவரது தங்கைகளும் ரசித்து பார்த்ததில் கோபமடைந்து அவர்களை கொலை செய்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பல குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் அக்கா தனது சொந்த தங்கைகளையே சிறிய காரணத்திற்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒன்னும்மில்லாத… காரணத்திற்காக 2 பேர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
