அமெரிக்க நாட்டின் விர்ஜீன்யா எனும் நகரில் பாம்பு செய்த வேலையால் அப்பகுதிலுள்ள 11000க்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம்யின்றி தவித்தனர். இந்த பகுதியில் கிறிஸ்டோபர் நியூ போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சென்ட்ரல் நியூ போர்ட் நியூஸ் போன்ற இடங்களுக்கும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டதால் மக்கள் தவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மின்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி மின்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்த போது பாம்பு ஒன்று மின் கோபுரத்தின் மேல் இருந்து தெரியவந்து. அதிக மின்னழுத்த வழியாக பாம்பு சென்றதால் இவ்வாறு நடந்திருக்கலாம் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பின் மின்துறை அதிகாரிகள் பாம்பை அகற்றியதுடன் சுமார் 1 1/2 மணி நேரத்திற்கும் மேல் பணி புரிந்து நிலைமையை சீர் செய்தனர். இதனால் மீண்டும் விர்ஜீனியா நகரத்திற்கு மின் விநியோகம் கிடைக்க தொடங்கியது.
