பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியான கீதா மேத்தா, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில், “எழுத்தாளர் கீதா மேத்தாவின் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. துயரமான இந்த நேரத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் அவரது குடும்பத்தினர் உடன் நான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்