இன்று (செப்.,17) பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  இன்று  பிரதமர் மோடியின் 73வது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குஜராத்தின்  சூரத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஆஃபர் அறிவித்துள்ளனர். இதன்படி 1000 ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் 30% தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

73 ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் 100% தள்ளுபடி அறிவித்துள்ளனர். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆஃபர் வழங்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் குஜராத் பாஜக MLA பூர்ணேஷ் மோடி.