மும்பையில் ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது

மும்பையை சேர்ந்த மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன்யடுத்து தனியார் நிறுவனம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் உரிமத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. ஆய்வகத்தின் அறிக்கை வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.