இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப சிறப்பு திட்டங்களும் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கிறது.
இந்த நிலையில் MCLR எனப்படும் நிதி அடிப்படையிலான கடனுக்கான வட்டியை 0.10% எஸ் பி ஐ வங்கி உயர்த்தி உள்ளது. இதனை தொடர்ந்து வீடு மற்றும் வாகன கடன் வாங்கியோரின் மாத தவணை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதம் தொடர்பான விவரங்களை sbi வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.
