
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த பிடாரமங்கலம் தேவர்மலை சேர்ந்த ஜெயக்குமார் (34), ஈரோடு மாவட்டம் முத்தூரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களில் ஆன்லைன் விளையாட்டுகளில் அவர் ரூ.10 லட்சம் வரை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிதி இழப்பினால் மன அழுத்தத்திற்கு ஆளான ஜெயக்குமார், தனது மனைவியிடம் ரூ.2 லட்சம் கேட்டதால், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நெய்க்காரன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அவர், தற்கொலை செய்ய முயன்றார். உறவினர்கள் தடுத்து, ஆபத்தை தவிர்த்தனர். எனினும், நேற்று மாலை 3 மணியளவில் நெய்க்காரப்பட்டி ரயில்வே தண்டவாளத்திற்கு சென்ற ஜெயக்குமார், ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.