சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ காண்போரை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், மறுபக்கம் மணமகனின் நிலையை எண்ணி வருத்தப்பட வைத்துள்ளது. திருமணத்தின் மிக முக்கியமான சடங்கான ‘ஜெய்மாலா’ (மாலை மாற்றும் சடங்கு) மேடையில் நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. கேமராக்கள் மின்ன, மணமகன் மிகுந்த உற்சாகத்துடன் மணப்பெண்ணுக்கு மாலை சூட்ட கைகளை உயர்த்திய அந்த விநாடியில், எதிர்பாராத விதமாக அவரது கால்சட்டை (Pajama) கழன்று கீழே விழுந்தது.
Groom’s pajama suddenly slips down during the jaimala ceremony, the best day of his life ruined! 😭 pic.twitter.com/R01ZuhONhy
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 28, 2026
மாலை சூட்ட முயன்ற அதே வேகத்தில் ஆடை நழுவியதால், அந்த இடமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தது. மணப்பெண் மற்றும் மேடையில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஆடை நழுவியதை உணர்ந்த மணமகன் உடனடியாக சுதாரித்துக் கொண்டாலும், அந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகிவிட்டன. “திருமண உடைகளைத் தேர்வு செய்யும்போது மட்டும் போதாது, அதைச் சரியாக அணிவதிலும் கவனம் தேவை” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைத்து ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
