கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள 3 பகுதிகளில் கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகியுள்ளதால் மீட்பு பணிகள் என்பது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முண்டகை கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி மற்றும் சூரல் மலை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளி 2 பள்ளிகள் நிலச்சரிவினால் பெரிய அளவில் சேதாரமானதோடு மண்ணில் புதைந்தது.
இதில் சிக்கி இதுவரை 23 பள்ளி குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 27 குழந்தைகள் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதோடு தொடர்ந்து பல எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இதில் முண்டகை பள்ளியில் படித்து வந்த 18 குழந்தைகளும், சூரல் மலை பகுதிகளில் படித்து வந்த 32 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு உயிரிழந்த மாணவர்களின் உடல்களை ஆசிரியர்கள் மூலமாக அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
