ஹரியானா மாநிலத்தின் ஃபரீதாபாத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் விளையாட்டின் போது தவறுதலாக 10 ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். இந்த நாணயம் அவனது உணவுக்குழாயில் சிக்கிக்கொண்டதால், சுவாசிப்பதில் கடுமையான சிரமம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், அவனது பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் சிறுவனை பரிசோதித்தனர்.

பின்னர் மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி முறையைப் பயன்படுத்தி, 15 நிமிடங்களுக்குள் அந்த நாணயத்தை அகற்றினர். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து, சிறுவன் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டான். குழந்தைகள் சிறிய பொருட்களை விழுங்கும் ஆபத்து அதிகம் உள்ளதால், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் வீட்டு வைத்தியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்தனர்.