பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள வைதேகி மருத்துவமனையில் நடிகர் சிவண்ணா கடும் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியதால், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.