வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு (37) இன்று காலமானார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவரை அவரது நண்பர் டாக்காவில் உள்ள உத்தரா அதுனிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் ஹுமைராவின் தோழி அந்த இடத்தை விட்டு வெளியேறி உள்ளார். ஹுமைராவின் கழுத்தில் காயங்கள் இருந்ததால் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 37 வயதில் நடிகை உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.