சமூக ஊடகங்களில் சமீபகாலமாக பைக் அல்லது காரில் ஆபத்தான முறையில் ரொமான்ஸ் செய்துகொண்டே பயணிக்கும் ஜோடிகளின் வீடியோக்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு புதிய வீடியோ, எல்லை மீறிய அலட்சியம் எப்படி ஒரு பயங்கரமான விபத்தில் முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
இந்த வீடியோவில், ஓடும் வாகனத்தில் ஒரு இளம் ஜோடி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி, பொது இடத்தில் அநாகரீகமான முறையில் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் சுற்றுப்புறத்தையும், சாலையின் பாதுகாப்பையும் முற்றிலும் மறந்து சில்மிஷங்களில் ஈடுபட்டிருந்த அந்த ஜோடி, எதிர்பாராதவிதமாகத் தங்களது வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, ஒரு கொடூரமான விபத்தில் சிக்கியுள்ளனர்.
एक लड़का एक लड़की प्यार में पड़ गए सुना था लेकीन आज देख भी लिया है.!
शायद कविराज ने इसे ही “प्यार में पड़ना” जैसे शब्द से संबोधित किया है.!
मित्रों क्या आपने भी किसी को प्यार में पड़ते हुए देखा है तो कमेंट में जरुर बताएं 😊 pic.twitter.com/VCWoXgZkQA
— Najir Hussain (@Najir_Hussain88) May 20, 2026
“>
இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து வீடியோ, பகிரப்பட்டு இணையவாசிகளிடையே வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த சமூக ஊடகப் பயனர்கள், சாலையில் செல்லும் போது தங்களின் பாதுகாப்பிலும், பொது ஒழுக்கத்திலும் இளைஞர்கள் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள் என்று கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சில நொடிகள் இன்பத்திற்காகவும், சமூக ஊடக கவனத்திற்காகவும் போக்குவரத்து விதிகளை மீறிச் செய்யப்படும் இதுபோன்ற ஆபத்தான செயல்கள், உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடுகிறது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
