சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலகட்டங்களுக்கு பிறகு இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ள நிலையில் இது குறித்தான துயர செய்திகள் சமீப காலமாக வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குஜராத் மாநிலத்தில் தாவல் பரோட்-யாமினி பென் (37) தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.

இந்த தம்பதி தங்களுடைய 5 வயது மகனின் பிறந்த நாளை சமீபத்தில் ஒரு ஹோட்டலில் கொண்டாடினர். அப்போது யாமினி மேடையில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மகனை ஒரு பெண்ணிடம் கொடுத்தார். பின்னர் தன் கணவனின் தோளை பிடிக்க அவர் முயற்சி செய்த நிலையில் நொடிப்பொழுதில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.