செய்தி வாசிப்பாளராக பணியாற்றி அதன் பிறகு பிக் பாஸில் கலந்து கொண்டவர் அனிதா சம்பத். பிக் பாஸ் இல் இருந்து வெளியே வந்து இவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது l. பல விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் இவர் ரொம்பவே பிஸியாகிவிட்டார். இன்ஸ்டா பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். இந்த நிலையில் இரண்டு நாளுக்கு முன்பாக பாலிக் சுற்றுலா சென்ற அனிதா சம்பத் அது குறித்து இனஸ்டாவில் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது என்று போஸ்ட் போட்டிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் டிரிப் போடும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அனிதா. இதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படத்தை இன்ஸ்டா வில் பகிர்ந்து அவருடைய கணவர் எல்லாம் சில நாட்களில் சரியாகிவிடும் பப்பு என்று மனைவிக்கு ஆறுதலாக போஸ்ட் போட்டுள்ளார்.