இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, இன்று (ஜன. 30, வெள்ளிக்கிழமை) அதிகாலை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கை திடீரென செயலிழக்கச் செய்தது (Deactivate) இணையதளத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.
27.4 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது பக்கம் திடீரென ‘User Not Found’ எனக் காட்டியதால், அவர் சமூக வலைதளங்களில் இருந்து நிரந்தரமாக விலகிவிட்டாரா அல்லது அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக விளையாடி, தனது 54-வது சதத்தைப் பூர்த்தி செய்திருந்த கோலி, தற்போது லண்டனில் ஓய்வில் இருக்கும் நிலையில் இந்த வினோத நடவடிக்கை நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் அவரது சகோதரர் விகாஸ் கோலியின் கணக்கும் காணாமல் போனதால், இது திட்டமிட்ட விலகலாக இருக்கலாம் என ஊகங்கள் பரவின. இதற்கிடையே, ரசிகர்கள் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவுகளில் “அண்ணன் எங்கே?” என உருக்கமாகக் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

சுமார் சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் பழையபடி அனைத்துப் பதிவுகளுடனும் நேரலைக்கு வந்தது. இது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு (Technical Glitch) காரணமாகவோ அல்லது மெட்டா நிறுவனத்தின் பாதுகாப்பு நடவடிக்கையாகவோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Breaking: Virat Kohli deactivates his official IG account suddenly.
274 million fans left wondering… Hope everything’s okay, Virat! 🙏 #ViratKohli #Trending pic.twitter.com/TLexgDokEu— Footi Kismatt (@FootiKismatt) January 29, 2026
“>
இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரப் பதிவிற்கு சுமார் 14 கோடி ரூபாய் வரை ஈட்டும் கோலி, உலக அளவில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரராகத் திகழ்கிறார். தற்போது 37 வயதாகும் அவர், 2027 உலகக்கோப்பையை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து அவர் தற்காலிகமாக மறைந்தது அவரது ரசிகர்களிடையே ஒரு நிமிடம் இதயத் துடிப்பையே நிறுத்திவிட்டது என்றே கூறலாம்.
