ஒரு பள்ளி மாணவன் தனது மதிய உணவை வழக்கமான உணவுப் பெட்டிக்குப் பதிலாக காலியான ஐபோன் பெட்டிக்குள் கொண்டு வந்த சம்பவம், ஆசிரியர் மற்றும் வகுப்புத் தோழர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியர் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, அந்தச் சிறுவன் அமைதியாக “மேடம், மதிய உணவு” என்று பதிலளித்து, உள்ளே காகிதத்தில் சுற்றப்பட்ட பரோட்டாக்களைக் காட்டினான். இதுகுறித்து ஆசிரியர், “யார் இதை பேக் செய்தது? இது உங்களுக்கு மதிய உணவுப் பெட்டி போல் தெரிகிறதா?” என்று கேட்க, சிறுவன் “நானே அதைச் செய்தேன்” என்று பதிலளித்தான்.
A video from a school classroom has gone viral after a student walks in carrying his lunch not in a regular tiffin container, but in an empty iPhone box, shocking and amusing the teacher and classmates.
The clip opens with the student casually holding the iPhone box at his desk.… pic.twitter.com/HdkX9Ptbhf
— Startup Pedia (@startup__pedia) November 26, 2025
“>
இந்த எதிர்பாராத வெளிப்பாட்டால் வகுப்பே சிரிப்பில் மூழ்கியது, மேலும் இந்த வேடிக்கையான தருணம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.மாணவனின் இந்த நகைச்சுவையான குறும்பு சமூக ஊடகங்களில் விரைவாகப் பரவி, மீம்ஸ்களையும், நகைச்சுவைகளையும், பலரின் பாராட்டையும் பெற்றது. பயனர்கள் மாணவனின் படைப்பாற்றலைப் பாராட்டி, இதை “பிரீமியம் மதிய உணவுப் பெட்டி” என்று கேலி செய்தனர்.
