இந்தியாவின் மிகப்பெரிய விற்பனை தளமான ப்ளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது சிறப்பு விற்பனைகளை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பிட்ட பொருள்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் இந்த சலுகைகள் கூடுதலாகவே கிடைக்கும். அவ்வகையில் தற்போது பிளிப்கார்டு நிறுவனம் ஐபோன்களுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

அதன்படி ஐபோன்14- க்கு ரூ. 5,970 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன் சந்தை விலை 80 ஆயிரம் ரூபாயாகும். இதனைத் தவிர எக்சேஞ்ச் சலுகை மூலம் 23 ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் தள்ளுபடி பெற முடியும். அது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாங்கினால் உடனடியாக 7 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.