இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிதாக வயர்லெஸ் டிவியை டிஸ்பிளேஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியை சுவரில் பொருத்துவதற்கு கூட ஸ்டாண்ட் தேவைப்படாதாம். வெற்றிட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வயர்லெஸ் தொலைக்காட்சி சாதனத்தை சுவரில் சுவரில் அழுத்தினால் அப்படியே ஒட்டிக் கொள்ளுமாம். அதன்பிறகு இந்த புதிய டிவியில் அகற்றி ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் இருக்கிறது. இதனால் தனியே மின் இணைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

இந்நிலையில் 55 இன்ச் அளவு கொண்ட வயர் லெஸ் டிவியானது இந்த ஆண்டு அமெரிக்க சந்தைக்கு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த வயர் லெஸ் டிவியின் விலை 2,48,207 ரூபாயாகும். இந்த புதிய டிவிக்கு ரிமோட் கிடையாது. டிவியில் உள்ள கேமரா பார்வையாளர்களின் கை அசைவுக்கு ஏற்ப இயங்கக் கூடியதாகும். குரல்வழி ஆணை மூலமே வேண்டிய சேனல்களை பார்க்கவும், டிவியை அணைக்கவும் முடியும். மேலும் இந்த டிவிக்கு கேபிள் கனெக்சன், டிஷ், மின்சார ஒயர் உள்ளிட்ட எந்த வயரும் இல்லாமல் இல்லாமல் இயங்கக்கூடிய முதல் தொலைக்காட்சி சேனல் ஆகும்.