இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இவர் நீண்ட நாட்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட், 4-வது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்து முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பும்ரா கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பும்ரா ஐபிஎல் போட்டிகளில் விளையாட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஐபிஎல் 2023 போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பும்ரா பங்கேற்பது சந்தேகம் தான் என்று கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் இனி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் நேரடியாக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.