பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் RCB போட்டியின் டிக்கெட் விலையை பார்த்து ரசிகர்கள் திகைத்துப் போய் உள்ளனர். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைய குறைய கட்டணம் உயர்வும் நடைமுறை பின்பற்றப்படுவதால் P2 ஸ்டாண்டின் ஒரு டிக்கெட் ரூ.55,055- க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 5200 ஆகும். இது ஐபிஎல் தொடரில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிக விலை உயர்ந்த டிக்கெட்டுகளில் ஒன்றாகும்.