அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக திருவண்ணாமலை தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் அருள் ஆறுமுகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காரசாரமாகப் பேசியுள்ள அவர், “உங்களுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாது; ஐஏஎஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இப்படி ஒரு தவறான முடிவை எடுக்கக் கூடாது” என்று சாடியுள்ளார்.

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடன் தள்ளுபடி என்பது உண்மையான விவசாயிகளுக்குச் செய்யும் துரோகம் என்று குறிப்பிட்ட அவர், “இதற்கெல்லாம் முட்டுக் கொடுக்க முடியாது” என மிக ஆவேசமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

இவரின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.