பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “மாமன்னன்” படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின் உடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதன்பின்  இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடியிருக்கும் “ராசா கண்ணு” பாடல் வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதி இருக்கும் இப்பாடலை வடிவேலு பாடி உள்ளார்.