டைரக்டர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தில் வெந்து தணிந்தது காடு படம் வாயிலாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி நாயகியாக நடித்து உள்ளார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் வரும் ஜூன் 2-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.