சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மத்திய அரசு எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகை தரப்படுவதை நிறுத்தும் முயற்சியில் பாஜக ஈடுப்படுகின்றது. ஏழை மாணவர்களின் கல்வி முக்கியம் என்று அண்ணாமலை கருதினால் அவர்கள் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வாங்கி கொடுப்பதை பற்றி பேசி இருக்கலாம். அதனை ஏன் அவர் வாங்கிக் கொடுக்கவில்லை? அந்தக் ஸ்காலர்ஷிப் வழங்குவதற்கு கூட வருமான வரி விதிக்கிறார்கள். இவ்வளவு மோசமான வருமான வரம்பை வைத்துள்ள மத்திய அரசிடம் சென்று அண்ணாமலை இது பற்றி கேள்வி கேட்டிருக்கலாமே?

போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கொடுக்கக் கூடாது என்பதற்காக சூது சுழற்சி செய்யும் பாஜக இவ்வளவு பெரிய பாகுபாடு வைத்துள்ளது. இதனை களைய பாஜகவும் அண்ணாமலையும் என்ன குரல் கொடுத்துள்ளார்கள். இந்தி மீது எங்களுக்கு வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால் இந்தியை இந்தியாவின் மூலைகளிலும் கற்றாக வேண்டும் என்ற தேவை தற்போது எங்கிருந்து வந்தது. ஏழை மாணவர்கள் இந்தி படித்து விட்டால் வேலை கிடைத்து விடுமா? அரசு பள்ளியில் தான் மாணவர்கள் அதிகமாக படித்து வருகிறார்கள். இந்தியா முழுவதும் ஒரே கொள்கையை திணிப்பது ஏன்? தேசத்தில் ஒரே மொழி கொள்கை என்பது மிகவும் ஆபத்தானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.