இன்றைய இளைஞர்களுக்கு ஸ்மார்ட் போன் வைத்திருப்பதை விட ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பது தான் கனவாக உள்ளது. அதிலும் புதிய மாடல் பழைய மாடல் என்று இல்லாமல் ஐபோன் என்றாலே சிறந்தது தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஐபோன் ஒன்று ஏலத்திற்கு வந்தது.

இந்த ஐபோன் 2007 ஆம் வருடம் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதல் ஐபோன் மாடல் ஆகும். இரண்டு மாதங்களை இந்த ஐபோன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வெளியான புதிதில் 499 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட இந்த 4gb மாடல் ஐபோன் 16 வருடங்கள் கழித்து தற்போது ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 644 டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் 1,30,19,683) ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.