சமூக வலைதளங்களில் தற்போது “கலேஷ்” சண்டை அல்லது மோதல் என்ற பெயரில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. ஒரு காதலனுக்காக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஒரு இளைஞரை காதலிப்பது தொடர்பாக இரண்டு இளம்பெண்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இரண்டு பெண்கள் மற்றொரு பெண்ணை  சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.

 

View this post on Instagram

 

A post shared by @saimabegum100

அந்தப் பெண்ணை மற்ற இரு பெண்களும் சேர்ந்து சுமார் 60 முறை கன்னத்தில் அறைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டது. ஒரு சிறிய காரணத்திற்காக இவ்வளவு மோசமாக ஒரு பெண்ணை மற்ற இருவர் தாக்கும் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அந்தப் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். “காதல் விவகாரங்களுக்காக இது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.