கேரளாவில் தீபக் என்ற 42 வயது நபர் பேருந்தில் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டார். அது பேருந்தில் கூட்ட நெரிசலின் போது எதார்த்தமாக நடந்திருக்கலாம் என்றும் அந்த பெண் உண்மை அறியாமல் அப்படி வீடியோ போட்டதாகவும் பலரும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது துணிக்கடையில் வேலை பார்த்து வரும் தீபக்கிற்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் அந்த வீடியோ வைரலானதால் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.

 

மேலும் இந்த விவகாரம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பஸ் ஸ்டாண்ட் மற்றும் தேர்தல் செல்லும்போது ஆண்கள் ஆட்டையால் தங்கள் உடம்பை மூடிக்கொள்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்திருந்தாலே அட்டையை வைத்து அவர்கள் இடையில் வைத்துக் கொள்வது போன்று இருக்கிறது. மேலும் அந்த வகையில் பேருந்தில் நடத்துனர் ஒருவர் தன் உடல் முழுவதையும் அட்டையால் மூடிக்கொண்டவாறு மலையாளத்தில் வாசகங்கள் அடங்கிய ஒரு அட்டை உடையை அணிந்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.