
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் தினம்தோறும் பயணிக்கின்றனர். இந்த நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் ரயில்கள் மார்ச் மாதம் முதல் சோதனை முறையில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சேவைகள் ஏப்ரலில் தொடங்கும் எனவும் முதல் ரயில் டெல்லி மற்றும் மும்பை இடையே தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் விட வேகமான இந்த ரயிலில் 16 முதல் 20 ஏசி மற்றும் ஏசி அல்லாத பெட்டிகள் இருக்கும். இந்த ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.