சத்தீஸ்கர் மாநிலத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது. ரோஷினி சூர்யவன்ஷி (22) என்ற இளம்பெண், கம்தா பிரசாத் என்பவரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கம்தா பிரசாத் அந்தப் பெண்ணைத் தவிர்த்து வந்ததாகவும், அவரது செல்போன் எண்ணைத் தடுத்ததாகவும் (Block) கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஷினி, தனது காதலன் தன்னை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதாகச் சந்தேகமடைந்துள்ளார்.

இந்த ஆத்திரத்தில் கம்தா பிரசாத்தின் வீட்டிற்கே நேரடியாகச் சென்ற ரோஷினி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனின் மார்பில் சரமாரியாகக் குத்தியதில், அவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் ரோஷினியைக் கைது செய்தனர். விசாரணையில், தன்னை ஏமாற்றியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.