உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டா கரடியைப் பராமரிக்கும் ஊழியர், பாண்டாவின் முன்னாலேயே வழுக்கி விழுந்ததும், அதைப் பார்த்து அந்தப் பாண்டா மனிதர்களைப் போலவே சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரியல் பூங்கா ஒன்றில் பாண்டாவிற்கு உணவு வைக்க அல்லது கூண்டினைச் சுத்தம் செய்ய அதன் பராமரிப்பாளர் உள்ளே நுழைந்தார். அப்போது எதிர்பாராத விதமாகப் தரை வழுக்கியதில், அவர் அந்தப் பாண்டாவின் கண்ணெதிரிலேயே நிலைதடுமாறி கீழே விழுந்தார். தான் விழுந்த தர்மசங்கடமான நிலையில் இருந்து அவர் மீள முயன்றபோது, அங்கு ஒரு வினோதமான சம்பவம் நடந்தது.
Cutest video on the internet 😍😍
In a funny moment caught on camera, a zoo panda appeared to burst into laughter after its caretaker slipped and fell right in front of him.
As the caretaker tried to recover, the panda’s reaction made the scene even funnier, turning an awkward… pic.twitter.com/rbcHVnIvSZ
— New Bharat Speaks 🇮🇳 (@Vishwas1228) April 16, 2026
பொதுவாக அமைதியாக இருக்கும் பாண்டா, தன் பராமரிப்பாளர் கீழே விழுந்ததைப் பார்த்ததும் உற்சாகமடைந்தது. அது வாயைத் திறந்து மனிதர்கள் சிரிப்பதைப் போலவே சைகை காட்டி, அங்கும் இங்கும் உருண்டு புரண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அந்தப் பாண்டாவின் ரியாக்ஷன், ஒரு நகைச்சுவை காட்சியைப் போலவே அமைந்திருந்தது.
யாரோ ஒருவர் தற்செயலாகப் படம் பிடித்த இந்த வீடியோ, தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “பாண்டாக்களுக்குக் கூட இவ்வளவு நகைச்சுவை உணர்வா?” என நெட்டிசன்கள் வியப்புடன் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
