
கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பும் போட்டியாக ஐபில் உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியின் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். சென்னை, மும்பை , டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களிலும் போட்டி நடைபெறுகிறது. IPL 18 ஆவது சீசனானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சென்னை சிங்கம் IPL QR குறியீடு’ என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது சென்னை பெருநகர காவல் துறை.