
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தான் அதிகம் உள்ளனர். தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்ப திட்டங்களையும் சலுகைகளையும் வங்கி வழங்கி வரும் நிலையில் பிக்சட் டெபாசிட் என்பது ஒரு பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பம் ஆகும். இது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றது. 2025 ஆம் ஆண்டில் எஸ்பிஐ வங்கி அதன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் மீதான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
சாதாரண குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள்:
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 6.25%
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 6.50%
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை – 6.80%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 7.00%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 6.75%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 6.50%
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 4.00%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 6.00%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை – 6.75%
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 7.00%
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை – 7.30%
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை – 7.50%
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை – 7.25%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை – 7.50%
மூத்த குடிமக்கள் பொதுமக்களை விட அதிக வட்டி விகிதங்களை பெறுகின்றனர். எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அதில் முக்கியமான திட்டம் தான் அம்ரீத் கலாஷ் திட்டம். இந்த முதலீட்டு திட்டத்தின் காலம் 400 நாட்கள் மட்டுமே. பொதுமக்களுக்கான வட்டி விகிதம் 7.10 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.60 சதவீதமாகவும் உள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
அதனைப் போலவே மற்றொரு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமான அம்ரித் வர்ஷா யோஜனா திட்டத்தின் முதலீட்டு காலம் 444 நாட்களாகும். இந்த திட்டத்தில் பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.25 சதவீதமாகவும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீதமாகவும் உள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.